/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்சை திருப்பியபோது படிக்கட்டில் நின்றபெண் பயணி தவறி விழுந்து பலி
/
பஸ்சை திருப்பியபோது படிக்கட்டில் நின்றபெண் பயணி தவறி விழுந்து பலி
பஸ்சை திருப்பியபோது படிக்கட்டில் நின்றபெண் பயணி தவறி விழுந்து பலி
பஸ்சை திருப்பியபோது படிக்கட்டில் நின்றபெண் பயணி தவறி விழுந்து பலி
ADDED : மார் 20, 2025 01:21 AM
பஸ்சை திருப்பியபோது படிக்கட்டில் நின்றபெண் பயணி தவறி விழுந்து பலி
சேலம்:சேலம், அஸ்தம்பட்டி, ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் அர்ச்சனா, 25. சேலம் நீதிமன்ற கேன்டீனில் சமையல் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் அர்ச்சனா, 3 ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல, தனியார் பஸ்சில் ஏறினார்.
பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாலத்தில் சென்று, வளைவில் டிரைவர் பஸ்சை வேகமாக திருப்பியுள்ளார்.அப்போது படிக்கட்டில் நின்றிருந்த அர்ச்சனா எதிர்பாராதவிதமாக, பஸ்சில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது.
மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.