/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொள்ளை வழக்கில் கைதான வாலிபர் தப்ப முயன்று விழுந்ததில் 'மாவுக்கட்டு'

ADDED : ஏப் 12, 2025 01:18 AM
கொள்ளை வழக்கில் கைதான வாலிபர்
ஆத்துார், ஏசேலம் மாவட்டம் தம்மம்பட்டி, மண்மலை ஊராட்சி பாலக்காட்டை சேர்ந்த, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வேணுகோபால், 75. இவரது வீட்டில், கடந்த மார்ச், 29ல், 20 பவுன் நகைகள், 10,000 ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில், 5 தனிப்படையினர், 4ல் இருவரையும், 5ல், 4 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியவரான, திருப்பூர், சவுடாம்பிகா நகரை சேர்ந்த
கிேஷார்குமார், 28, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய விபரங்கள், தலைமறைவாக உள்ளவர்கள் குறித்து, நேற்று விசாரித்தனர்.
அப்போது இயற்கை உபாதைக்கு செல்வதாக கூறிய கிேஷார்குமார், போலீஸ் ஸ்டேஷன் சுவர் ஏறி தப்ப முயன்றார். ஆனால் சுவரில் இருந்து விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. காயம் அடைந்த அவரை, போலீசார், ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு, 'மாவுக்கட்டு' போடப்பட்டுள்ளதாக, போலீசார்
தெரிவித்தனர்.தப்ப முயன்று விழுந்ததில் 'மாவுக்கட்டு'