/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லஞ்சம் கேட்கும் ஆர்.ஐ., 'எடிட்' வீடியோ என மறுப்பு
/
லஞ்சம் கேட்கும் ஆர்.ஐ., 'எடிட்' வீடியோ என மறுப்பு
ADDED : ஆக 31, 2024 01:30 AM
ஆத்துார்: ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் நலத்-துறை தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது. அங்கு, ஆர்.ஐ.,யாக கனிமொழி என்பவர் உள்ளார். அவர் ஒருவரிடம், தடையில்லா சான்று பெறுவதற்கு லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், 'தாசில்தா-ருக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும்; மற்றவர்களையும் பார்க்க வேண்டும்' என்ற தகவல் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து கனிமொழியிடம் கேட்டபோது, ''வீடியோவை எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நான் யாரிடமும் லஞ்சம் கேட்கவில்லை. வீடியோ பதிவு செய்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க,
தாசில்தாரிடம் புகார் செய்துள்ளேன்,'' என்றார்.ஆதிதிராவிடர் நல தாசில்தார் ஜெயலட்சுமியிடம் கேட்டபோது, ''வீடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரிக்கிறோம்,'' என்றார்.