sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அனுமன் ஜெயந்தி கோலாகலம்: விதவித அலங்காரங்களில் ஜொலித்த ஆஞ்சநேயர்

/

அனுமன் ஜெயந்தி கோலாகலம்: விதவித அலங்காரங்களில் ஜொலித்த ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தி கோலாகலம்: விதவித அலங்காரங்களில் ஜொலித்த ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தி கோலாகலம்: விதவித அலங்காரங்களில் ஜொலித்த ஆஞ்சநேயர்


ADDED : ஜன 12, 2024 10:01 AM

Google News

ADDED : ஜன 12, 2024 10:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: அனுமன் ஜெயந்தியால், விதவித அலங்காரங்களில் ஆஞ்சநேயர் ஜொலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தியையொட்டி, சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பால், பன்னீர், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின் தங்க கவசம் சாத்துப்படி செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், வெங்கடாசலபதி, ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயணர், உடையாப்பட்டி கந்தாஸ்ரமம், பட்டைக்கோவில் வரதராஜர், சிங்கமெத்தை சவுந்தரராஜர், நாமமலை வரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

நெத்திமேடு கரியபெருமாள், ஜருகுமலை கரியபெருமாள், உடையாப்பட்டி சென்றாய பெருமாள், குரங்குச்சாவடி கூசமலை பெருமாள் உள்பட மாவட்டத்தில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, அலங்கார ஆராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கொளத்துார் சென்றாய பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் வெண்கல கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். மேட்டூர், சேலம்கேம்ப், சீதா மலையில், 17 அடி உயர ஜீவ ஆஞ்சநேயர், மேட்டூர் வரதராஜ பெருமாள் கோவில் ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேச்சேரி, கைகாட்டி வெள்ளாறு, வசந்தம் நகரிலுள்ள ராமபக்த ஆஞ்சநேயருக்கு, 10,008 வடை மாலை சாற்றப்பட்டது.

இடைப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், திருநீறு அபிஷேகம், சந்தன அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. பின் தங்க கவசம் சாற்றப்பட்டது. அதேபோல் கவுண்டம்பட்டி யோக கணபதி கோவில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு, சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு, வடைமாலை, பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. ஆத்துார், கோட்டை குபேர ஆஞ்சநேயர் செந்துார காப்பு, புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். நரசிங்கபுரம் ரங்கநாதர் கோவிலில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர், வீரகனுார் வழித்துணை ஆஞ்சநேயர், தம்மம்பட்டி உக்ரகதலி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் உள்பட மாவட்டம் முழுதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us