/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி கொங்கு பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்
/
தி கொங்கு பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜன 18, 2025 01:51 AM
தி கொங்கு பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்
மல்லுார், : சேலம் மாநகர் அருகே, மல்லுாரில், தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி, 2007ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அங்கு, 3ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இறுதி பருவத்தேர்வுக்கு முன், பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வசதி செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவன அதிகாரி காயத்ரி, நேர்காணல் மூலம் மாணவர்களை தேர்வு செய்தார்.
முன்னதாக கல்லுாரி தலைவர் ராமலிங்கம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசுகையில், ''தேர்ச்சி பெற்ற மாணவர்கள், செல்லும் நிறுவனங்களில் குறித்த நேரத்தில் வேலைக்கு சென்று பணிபுரிந்து, படித்த கல்லுாரி, பணிபுரியும் நிர்வாகத்துக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்,'' என்றார்.
செயலர் செந்தில்குமார், பொருளாளர் நாகராஜன், முதல்வர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் மணிகண்டன், துறைத்தலைவர்கள் செய்திருந்தனர்.