/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உபரிநீர் போக்கியில் கழிவுநீர் அகற்றும் பணி தொடக்கம்
/
உபரிநீர் போக்கியில் கழிவுநீர் அகற்றும் பணி தொடக்கம்
உபரிநீர் போக்கியில் கழிவுநீர் அகற்றும் பணி தொடக்கம்
உபரிநீர் போக்கியில் கழிவுநீர் அகற்றும் பணி தொடக்கம்
ADDED : ஜன 19, 2025 01:28 AM
மேட்டூர், :மேட்டூர் அணை நிரம்பினால், 16 கண் மதகு உபரிநீர் போக்கி வழியே தண்ணீர் வெளியேற்றப்படும். ஆனால் உபரிநீர் போக்கியில் காணப்படும் ஏராளமான குட்டைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அதில் சின்னகாவூர் அருகே உபரிநீர் போக்கி
குட்டையில் நீர் செந்நிறமாக தேங்கியது. அந்த ரசாயன கழிவுநீர், காவிரியாற்றில் கலந்தால், சேலம், வேலுார் பகுதிக்கு நீரேற்று நிலையம் மூலம் அனுப்பும் குடிநீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால், மேட்டூர் சிட்கோ தொழிற்பேட்டை
நிர்வாகம் சார்பில், கழிவுநீரை அகற்ற மாசு கட்டுப்பாடு வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். நேற்று, சிட்கோ தொழிற்கூட உரிமையாளர்கள், ரசாயன கழிவுநீரை உறிஞ்சி எடுத்து, 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கரில் நிரப்பி
எடுத்துச்சென்றனர்.இதுகுறித்து மேட்டூர் அணை சிறு தொழிலதிபர் சங்கத்தலைவர் மாதப்பன் கூறுகையில், ''கழிவுநீரை டிராக்டரில் ஏற்றி ஆலை களுக்கு கொண்டு செல்கிறோம். அங்கு மறுசுழற்சி செய்து பயன் படுத்துவோம்.
முதல் நாளில், 10 முறையாக, 50,000 லிட்டர் கழிவுநீரை டிராக்டரில் ஏற்றி கொண்டு சென்றுள்ளோம். தொடர்ந்து, 10 நாட்கள் வரை, கழிவுநீர் அகற்றும் பணி நடக்கும்,'' என்றார்.