ADDED : ஜன 22, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீயில் எரிந்து கூரை வீடு சேதம்
மேட்டூர், :மேச்சேரி, அரங்கனுார், கலர் காட்டை சேர்ந்த, பிளம்பர் முருகேசன், 44. இவரது தார்சு வீடு அருகே கூரை வீடும் உள்ளது. நேற்று மதியம், மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், கூரை வீட்டின் ஒரு பகுதி கருகி சேதமானது. மக்கள் தீயை அணைத்தனர். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
+