/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மோட்டாரை ஆன் செய்துவிட்டுதி.மு.க., அரசு பெயர் எடுக்கிறது'
/
'மோட்டாரை ஆன் செய்துவிட்டுதி.மு.க., அரசு பெயர் எடுக்கிறது'
'மோட்டாரை ஆன் செய்துவிட்டுதி.மு.க., அரசு பெயர் எடுக்கிறது'
'மோட்டாரை ஆன் செய்துவிட்டுதி.மு.க., அரசு பெயர் எடுக்கிறது'
ADDED : ஜன 29, 2025 01:10 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுாரில், அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார். அதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்கள் மட்டுமின்றி மக்கள், போலீசாருக்கே பாதுகாப்பு கிடையாது. அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேட்டூர் உபரி நீரேற்றும் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கி செயல்படுத்தப்பட்டது. தற்போது மோட்டாரை மட்டும், 'ஆன்' செய்துவிட்டு, தி.மு.க., அரசு பெயர் எடுக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு தி.மு.க., தான்.
இவ்வாறு அவர் பேசினார்.சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணன், வெற்றிவேல், ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், பேரூர் செயலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.