/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலத்தில் செல்லும் பஸ்கள் மக்கள் சாலை மறியல்
/
பாலத்தில் செல்லும் பஸ்கள் மக்கள் சாலை மறியல்
ADDED : ஜன 29, 2025 01:15 AM
பாலத்தில் செல்லும் பஸ்கள் மக்கள் சாலை மறியல்
தலைவாசல்: தலைவாசல் அருகே மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப் வழியே புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் அரசு, தனியார் மப்சல் பஸ்கள், மேம்பாலம் வழியே செல்கின்றன. பஸ்சில் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.
இதனால் மேம்பாலத்தில் இருந்து, சர்வீஸ் சாலையில் பஸ் செல்ல, 'கிராஸிங்' பாதை அமைக்கக்கோரி, நேற்று காலை, 9:30 மணிக்கு, மணிவிழுந்தான் வடக்கு, தெற்கு, புதுார், காலனி, சார்வாய், வடகுமரை, தேவியாக்குறிச்சி உள்ளிட்ட மக்கள், மணிவிழுந்தான் ஸ்டாப்பில், சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைவாசல் போலீசார் பேச்சு நடத்தி, பஸ்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். இதனால், 10:30 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர்.

