/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயிலில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஆலோசனை
/
ரயிலில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஆலோசனை
ADDED : பிப் 06, 2025 01:28 AM
ரயிலில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஆலோசனை
சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், போதை பொருள் கடத்தலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., பாபு தலைமை வகித்தார். அதில் சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை உதவி கமிஷனர் செங்கப்பா, போதை தடுப்பு, மது விலக்கு பிரிவு உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வட மாநிலம், கர்நாடகாவில் இருந்து சேலம் வழியே செல்லும் ரயில்களில் கடத்தப்படும் போதை பொருட்களை தடுப்பது குறித்து ஆலோசித்தனர்.
தொடர்ந்து சேலம் கோட்டம் முழுதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொள்வது; ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் போலீசார் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்வது; கடத்தலுக்கு உதவியாக இருப்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடந்தது.