/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலை வழக்கு விசாரணை ஆஜராகாத வாலிபர் கைது
/
கொலை வழக்கு விசாரணை ஆஜராகாத வாலிபர் கைது
ADDED : பிப் 12, 2025 01:03 AM
கொலை வழக்கு விசாரணை ஆஜராகாத வாலிபர் கைது
மேட்டூர்:கொளத்துார் அடுத்த, பாலவாடியை சேர்ந்த டிரைவர் பொன்குமார், 34. இவருக்கும், அருகே உள்ள வெடிக்காரனுாரை சேர்ந்த செல்வகுமாருக்கும் முன்விரோதம் இருந்தது. 2022 மே, 4ல் பொன்குமாரை, செல்வகுமார், அவரது நண்பரான, வெடிக்காரனுாரை சேர்ந்த குமார், 29, வெட்டி கொன்றனர். இதுகுறித்து வழக்கு பதிந்த கொளத்துார் போலீசார் செல்வகுமார், குமாரை கைது செய்தனர். ஜாமினில் வந்த குமார், மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் கொளத்துாரில் தலைமறைவாக இருந்த குமாரை, நேற்று முன்தினம் கொளத்துார் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.