/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சட்டவிரோத செயல்கள் அதிகரிப்புஉடற்பயிற்சி கூடத்துக்கு 'சீல்' வைப்பு
/
சட்டவிரோத செயல்கள் அதிகரிப்புஉடற்பயிற்சி கூடத்துக்கு 'சீல்' வைப்பு
சட்டவிரோத செயல்கள் அதிகரிப்புஉடற்பயிற்சி கூடத்துக்கு 'சீல்' வைப்பு
சட்டவிரோத செயல்கள் அதிகரிப்புஉடற்பயிற்சி கூடத்துக்கு 'சீல்' வைப்பு
ADDED : பிப் 13, 2025 01:08 AM
சட்டவிரோத செயல்கள் அதிகரிப்புஉடற்பயிற்சி கூடத்துக்கு 'சீல்' வைப்பு
இளம்பிள்ளை:சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, சுண்டெலி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 45. இவர், பெருமாகவுண்டம்பட்டி ஏரிக்கரையில், ராமசாமி, 95, என்பவருக்கு சொந்தமான இடத்தை, 2016ல் வாடகைக்கு எடுத்து, ஜரிகை வியாபாரம் செய்தார். 2020ல், கட்டட உரிமையாளர்களிடம் தெரிவிக்காமலே, சம்பந்தப்பட்ட பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியிலும் அனுமதி பெறாமல், 'ஜெய் பிட்னஸ்' பெயரில் உடற்பயிற்சி கூடம் தொடங்கி நடத்தி வந்தார்.
அங்கு வெளிநபர்கள் வந்து செல்வது, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது, சாலையில் செல்லும் பெண்கள், மாணவியரிடம் கேலி கிண்டல் செய்வது, மது அருந்தி கும்மாளம் போடுவது, இரவில் பிறந்தநாள் கொண்டாட்டம் என, அக்கம் பக்கத்தினரை அச்சுறுத்தி வந்தனர். இந்நிலையில், 2024 ஜூலை, 6ல், அந்த வழியே காரில் சென்ற தொழிலதிபர் சுந்தரமூர்த்தியை வழிமறித்து தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது புகார்படி, மகுடஞ்சாவடி போலீசார் ஜெயக்குமார் மீது வழக்குப்
பதிந்தனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால், வருவாய், போலீஸ் அறிக்கைப்படி, சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா, அந்த உடற்பயிற்சி கூடத்தை பூட்டி, 'சீல்' வைக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று, தெற்கு தாசில்தார் செல்வராஜ், மகுடஞ்சாவடி போலீசார் முன்னிலையில், உடற்பயிற்சி கூடத்துக்கு, 'சீல்' வைத்தார்.