/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி பின்புறம் பைக் மோதிவியாபாரி உயிரிழப்பு
/
லாரி பின்புறம் பைக் மோதிவியாபாரி உயிரிழப்பு
ADDED : பிப் 14, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாரி பின்புறம் பைக் மோதிவியாபாரி உயிரிழப்பு
பெத்தநாயக்கன்பாளையம்:காரிப்பட்டி அடுத்த அனுப்பூரை சேர்ந்த செல்வம் மகன் ரவி, 28. காய்கறி வியாபாரியான இவர், கெங்கவல்லியில் வியாபாரம் முடிந்து, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, காரிப்பட்டி நோக்கி, 'பல்சர்' பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்துகொண்டிருந்தார். பெத்தநாயக்கன்பாளையம் அருகே வைத்தியகவுண்டன்புதுாரில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, முன்புறம் சென்றுகொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில் ரவி படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.