/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவி பாலியல் விவகாரம்பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
மாணவி பாலியல் விவகாரம்பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 01:49 AM
மாணவி பாலியல் விவகாரம்பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
ஆத்துார்:பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்து பேசியதாவது:
ஆத்துார், தும்பல், ஏற்காடு உள்ளிட்ட அரசு பள்ளி, சேலம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில், பாலியல் தொல்லையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆத்துாரில், பள்ளி மாணவி பாலியல் தொந்தரவு தகவலை தெரிவிக்காமல், தி.மு.க.,வின், பி.டி.ஏ., தலைவர், கட்டப்பஞ்சாயத்து நடத்தி வந்துள்ளார். அவர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியில் மாணவியர், பெண்கள் வெளியே நடமாட முடியாதபடி பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், முன்னாள் தலைவர்கள் சுதிர்முருகன், ஜெயஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
போலீசாருடன் வாக்குவாதம்இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அதை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோது, 'மைக்' மூலம் பேச அனுமதி மறுத்தனர். இதனால், போலீசார், பா.ஜ.,வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், பேட்டரி ஒலிபெருக்கி மூலம் பேசி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரத மாதா வேடமணிந்த சிறுமி, கையில் விலங்கு மாட்டி, தேசிய கொடி ஏந்தியபடி நின்றிருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, மாவட்ட தலைவர் சண்முகநாதன் உள்பட, 64 பேர் மீது, ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

