/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில கைப்பந்தில் அசத்தல்மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு
/
மாநில கைப்பந்தில் அசத்தல்மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு
மாநில கைப்பந்தில் அசத்தல்மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு
மாநில கைப்பந்தில் அசத்தல்மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு
ADDED : பிப் 19, 2025 02:02 AM
மாநில கைப்பந்தில் அசத்தல்மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு
இளம்பிள்ளை:தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், தேனியில் நடந்த மாநில ஜூனியர் கைப்பந்து(ஹேண்ட்பால்) போட்டியில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. அந்த மாணவர்களை, கடந்த, 12ல் பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றே, கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து, மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.
நேற்று முன்தினம், இளம்பிள்ளை ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நேற்று, தலைமை ஆசிரியர் பிரபு தலைமையில் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் சார்பில், மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.