/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையில் 'உலா' வரும் காட்டெருமைகளால் அச்சம்
/
சாலையில் 'உலா' வரும் காட்டெருமைகளால் அச்சம்
ADDED : பிப் 19, 2025 02:04 AM
சாலையில் 'உலா' வரும் காட்டெருமைகளால் அச்சம்
ஏற்காடு:தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் ஒன்றான, சேலம் மாவட்டம் ஏற்காட்டில், வனப்பகுதிகள் அதிகம் உள்ளன. அங்குள்ள வன விலங்குகளில் காட்டெருமைகள் அதிகம் உள்ளன. இந்த எருமைகள், ஏற்காடு டவுன் பகுதியை சுற்றியுள்ள தோட்டங்களில் சுற்றித்திரிவது வழக்கம். இந்நிலையில் தோட்ட உரிமையாளர்கள், பாதுகாப்பு வேலிகள் போட்டு வருவதால் அந்த எருமைகள் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியே செல்லும் எருமைகள் மாற்று வழியில் செல்ல முயன்று, குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன.
நேற்று ஏற்காடு பஸ் ஸ்டாண்ட் அருகே, நியூ டவுன் பகுதி தனியார் தோட்டத்தில் இரு எருமைகள், சாலையோரம் சுற்றித்திரிந்தன. இதனால் மக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வந்தனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு காட்டு எருமைகள் வருவதால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் ஏற்காடு, 5 ரோடு பகுதியிலும் நேற்று காலை இரு காட்டெருமைகள், சாலையில் சுற்றித்திரிந்தன.