/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காதலிக்கு சொத்து எழுதித்தர அறிவுரைஎஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
/
காதலிக்கு சொத்து எழுதித்தர அறிவுரைஎஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
காதலிக்கு சொத்து எழுதித்தர அறிவுரைஎஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
காதலிக்கு சொத்து எழுதித்தர அறிவுரைஎஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : பிப் 23, 2025 01:30 AM
ஓமலுார்:காதலி பெயரில் சொத்தை எழுதிக் கொடுத்துவிடும்படி, காதலனுக்கு அறிவுரை வழங்கி, அதன்படி எழுதி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய, ஓமலுார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டார்.
சேலம், சிவதாபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 35. தனியார் நிறுவனத்தில் கணினி வல்லுனராக பணிபுரிகிறார். ஓமலுார் அருகே திமிரிக்கோட்டையை சேர்ந்தவர் சாருலதா, 23. இருவருக்கும், திருமண வரன் பார்க்கும் ஆன்லைன் தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு,
6 மாதங்களாக காதலித்தனர். இது இரு வீட்டுக்கும் தெரியவர, இருவரும், கடந்த, 16ல், வீட்டை விட்டு வெளியே, தர்மபுரி சென்று அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு, அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கினர். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர், மறுநாள் ஓமலுார் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் அழைத்ததால், தம்பதியர், கடந்த, 18ல் ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகினர். அப்போது பெண் வீட்டார், 'மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனால் உடனே திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். அத்துடன் அவருக்குரிய சொத்தை, மகள் பெயரில் எழுதி தரவேண்டும்' என, போலீசாரிடம் கூறினர். இதுகுறித்து விசாரித்த, எஸ்.ஐ., பிரபாகரன், பத்திரத்தில் எழுதி தர, காதலனுக்கு அறிவுரை வழங்கினார்.
அதேபோல் விக்னேஷ், இரு நாட்களில் திருமணத்தை பதிவு செய்து கொள்ளவும், என் தாயின் சொத்துகளை, மனைவிக்கு எழுதி கொடுப்பதாகவும் பத்திரத்தில் எழுதி, இரு வீட்டை சேர்ந்தவர்களும், போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ., பிரபாகரன் முன்னிலையில் பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, எஸ்.ஐ., பிரபாகரனை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் நேற்று
உத்தரவிட்டார்.