/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம்கட்சியினருக்கு மா.செ., அழைப்பு
/
ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம்கட்சியினருக்கு மா.செ., அழைப்பு
ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம்கட்சியினருக்கு மா.செ., அழைப்பு
ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம்கட்சியினருக்கு மா.செ., அழைப்பு
ADDED : பிப் 23, 2025 01:31 AM
ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம்கட்சியினருக்கு மா.செ., அழைப்பு
ஆத்துார்:-அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாளான, பிப்., 24ல்(நாளை), ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுக்கூட்டம் நடத்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
அதன்படி வரும், 26ல் ஆத்துார் தொகுதியில், ஆத்துார் நகரில் நடக்க உள்ள கூட்டத்தில் அமைப்பு செயலர் ராஜேந்திரன், கடலுார் தெற்கு மாவட்ட செயலர் கோபி பேச உள்ளனர். அதே நாளில் சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடியில் நடக்க உள்ள கூட்டத்தில், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் பூனாட்சி, மணிமேகலை பேச உள்ளனர்.
முன்னதாக, 25ல் கெங்கவல்லியில் நடக்க உள்ள கூட்டத்தில், திரைப்பட பாடல் ஆசிரியர் முத்துலிங்கம், பாரதிபிரியன் பேச உள்ளனர். வரும், 27ல் ஏற்காடு தொகுதி உடையாப்பட்டியில், சந்தானம், பூவை செழியன்; 28ல் வீரபாண்டி தொகுதி ஆட்டையாம்பட்டியில் திரைப்பட நடிகை கவுதமி, கோவை புரட்சி தம்பி பேச உள்ளனர்.
மார்ச், 1ல் மேட்டூர் தொகுதி, மேச்சேரியில் கல்யாணசுந்தரம், குணசேகரன்; 2ல் இடைப்பாடி தொகுதி இடைப்பாடியில் திலீபன், அன்பாகரன்; 4ல் ஓமலுார் தொகுதி, காடையாம்பட்டியில் அமைப்பு செயலர் முருகுமாரன், திலீபன் பேச உள்ளனர்.
இதில் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை விளக்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். அதனால் முன்னாள், இன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்.

