/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிராம பி.டி.ஓ.,வை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்
/
கிராம பி.டி.ஓ.,வை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்
கிராம பி.டி.ஓ.,வை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்
கிராம பி.டி.ஓ.,வை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்
ADDED : பிப் 27, 2025 02:20 AM
கிராம பி.டி.ஓ.,வை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்
தாரமங்கலம்:கிராம பி.டி.ஓ.,வை கண்டித்து, அ.தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தாரமங்கலம் ஒன்றியத்தில் அமரகுந்தி, செலவடை உள்பட, 4 ஊராட்சிகளில் ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், அ.தி.மு.க.,வினர், ஒன்றிய அலுவலகம் முன், ஓமலுார் சாலையில், நேற்று காலை, 11:20 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். தாரமங்கலம் போலீசார் முன்னிலையில், பி.டி.ஓ., லட்சுமி பேச்சு நடத்தினார். அப்போது, 'கிராம பி.டி.ஓ., சத்தியேந்திரன் வர வண்டும்' என, அ.தி.மு.க.,வினர், கூறினர். அவர், 11:40க்கு, அலுவலகம் வந்தார். உடனே, அனைவரும் அலுவலகத்தை முற்றுகையிட்டு நின்றனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: அமரகுந்தி உள்பட, 4 ஊராட்சிகளில், அதன் செயலர்கள் முறையாக குடிநீர் வழங்குவதில்லை. கிராம பி.டி.ஓ., சத்தியேந்திரனிடம் மனு அளிக்க வந்தால், அவர் இல்லை; வந்தவுடன் வந்து பாருங்கள் என அலுவலக பணியாளர்கள் கூறுகின்றனர். தற்போதும் பி.டி.ஓ., இல்லை. போனில் கேட்டபோது வெளியே பணியில் உள்ளதாக கூறினார். காத்திருந்தும் வராததால்
மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்நிலையில், அ.தி.மு.க.,வின், ஓமலுார் எம்.எல்.ஏ., மணி வந்தார். அவரது தலைமையில், தாரமங்கலம் ஒன்றிய செயலர்கள் காங்கேயன், மணிமுத்து உள்ளிட்ட கட்சியினர், பி.டி.ஓ.,விடம் பேசினர். சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், உரிய நடவடிக்கை எடுப்பதாக, சத்தியேந்திரன் கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.