/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்மாற்றி, கம்பங்களில் ஏறி அமர்ந்துஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
/
மின்மாற்றி, கம்பங்களில் ஏறி அமர்ந்துஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
மின்மாற்றி, கம்பங்களில் ஏறி அமர்ந்துஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
மின்மாற்றி, கம்பங்களில் ஏறி அமர்ந்துஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : மார் 01, 2025 01:42 AM
மின்மாற்றி, கம்பங்களில் ஏறி அமர்ந்துஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
மேட்டூர்:பணி நிரந்தரம் செய்யக்கோரி, மின்வாரிய ஒப்பந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், மின்மாற்றி, கம்பங்களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் மின்பகிர்மான வட்டம், அனல்மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்களில், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பல்வேறு ஒப்பந்த நிறுவனங்களில், 10 ஆண்டுக்கு மேலாக வேலை செய்கின்றனர். அவர்களை, பிரிவு, 153ன் கீழ் பணி நிரந்தரம் செய்வதாக, கடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க.,
வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து, 4 ஆண்டாகியும் பணி நிரந்தரம் செய்யவில்லை.
இதனால் நேற்று, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள், நேற்று காலை மேட்டூர் அனல்மின் நிலையம் முன் குவிந்தனர். அவர்களில் மேட்டூர் மின் பகிர்மான வட்டம், அனல்மின் நிலையம், நீர்மின் நிலையங்களில் பணிபுரிவோர், அனல்மின் நிலையத்துக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் வினியோக வட்ட ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள், 10 பேர் அனல்மின் நிலையம் அருகே உள்ள மின்மாற்றி, எதிரே உள்ள மின் கம்பங்களில் ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு கருமலைக்கூடல் போலீசார், மேட்டூர் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டன. ஒரு வழியாக, 10 பேருடன் போலீசார் பேசி அரை மணி நேரத்துக்கு பின் அவர்களை
இறக்கினர்.மேட்டூர் அனல்மின் நிலைய உட்பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசு எந்த முடிவும் தெரிவிக்கவில்லை.
20 பேர் மீது வழக்குமேட்டூர் அனல்மின் நிலைய உதவி பொறியாளர் வேலாயுதம் புகார்படி, மின்கம்பத்தில் ஏறிய, 18 தொழிலாளர், அவர்களை தற்கொலைக்கு துாண்டிய, 2 பேர் என, 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 80 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, இரவில் விடுவித்தனர்.