/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ் கண்டக்டரை தாக்கிய 'ரோடுரோலர்' டிரைவர் கைது
/
பஸ் கண்டக்டரை தாக்கிய 'ரோடுரோலர்' டிரைவர் கைது
ADDED : மார் 01, 2025 01:43 AM
பஸ் கண்டக்டரை தாக்கிய 'ரோடுரோலர்' டிரைவர் கைது
ஓமலுார்:சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி, புது ஏனாதி காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 47. ஓமலுார் அரசு பஸ் பணிமனை கண்டக்டரான இவர், நேற்று காலை, ஓமலுாரில் இருந்து, சேலம் நோக்கி புறப்பட்ட டவுன் பஸ்சில் பணியில் ஈடுபட்டார். பாத்திமா பள்ளி அருகே சென்றபோது, படியில் நின்றிருந்த ஒருவரை, வெங்கடாசலம் மேலே ஏறி வரும்படி அறிவுறுத்தினார்.
அதற்கு அந்த பயணி தகாத வார்த்தைகளில் பேசி, வெங்கடாசலம் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார். பின் மற்ற பயணியர், அவரை பிடித்து விசாரித்தபோது, ஓமலுார், காமராஜர் நகரை சேர்ந்த, 'ரோடுரோலர்' டிரைவர் பிரபு, 39, என தெரிந்தது. பின் அதே பஸ்சில் ஓமலுார் ஸ்டேஷனுக்கு சென்று, பிரபுவை ஒப்படைத்தனர். வெங்கடாசலம் புகார்படி, போலீசார் பிரபுவை கைது
செய்தனர்.