/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொட்டகை போட்டதில் தகராறுதம்பியை வெட்டிய அண்ணன் கைது
/
கொட்டகை போட்டதில் தகராறுதம்பியை வெட்டிய அண்ணன் கைது
கொட்டகை போட்டதில் தகராறுதம்பியை வெட்டிய அண்ணன் கைது
கொட்டகை போட்டதில் தகராறுதம்பியை வெட்டிய அண்ணன் கைது
ADDED : மார் 02, 2025 01:27 AM
கொட்டகை போட்டதில் தகராறுதம்பியை வெட்டிய அண்ணன் கைது
ஆத்துார்:ஆத்துார் அருகே துலுக்கனுார், புது காலனியை சேர்ந்த தங்கவேல் பெயரில், 3 சென்ட் நிலம் உள்ளது. அவரது மகள் மாரியம்மாள், 7 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். மகன்கள் கிருஷ்ணன், 63, சேகர், 48. இதில் கிருஷ்ணன், 10 ஆண்டுக்கு முன் நாமக்கல் மாவட்டம் சென்றுவிட்டார். சேகருக்கு திருமணமாகவில்லை. இவர், இரு சென்ட் நிலத்தை பயன்படுத்தி வந்த நிலையில், அங்கு கிருஷ்ணன் கொட்டகை போட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், கிருஷ்ணன், அரிவாளால் சேகரை வெட்டினார். படுகாயமடைந்த அவர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆத்துார் டவுன் போலீசார், கிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து, நேற்று அவரை கைது செய்தனர்.