/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதிதாக கட்டப்பட்ட பள்ளி: உபகரணங்கள்வழங்கிய மக்கள்
/
புதிதாக கட்டப்பட்ட பள்ளி: உபகரணங்கள்வழங்கிய மக்கள்
புதிதாக கட்டப்பட்ட பள்ளி: உபகரணங்கள்வழங்கிய மக்கள்
புதிதாக கட்டப்பட்ட பள்ளி: உபகரணங்கள்வழங்கிய மக்கள்
ADDED : மார் 02, 2025 01:29 AM
புதிதாக கட்டப்பட்ட பள்ளி: உபகரணங்கள்வழங்கிய மக்கள்
ஆத்துார்:ஆத்துார் அருகே பைத்துார் ஊராட்சி, தவளப்பட்டி மலைக்கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு தவளப்பட்டி, வானபுரம், கல்லுக்கட்டு பகுதிகளை சேர்ந்த, மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அப்பள்ளிக்கு, 2023ல் நிதி ஒதுக்கி, புதிதாக கட்டடம் கட்டப்பட்டது.
சில நாட்களுக்கு முன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் அந்த கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நேற்று தவளப்பட்டி மலைவாழ் மக்கள் ஒன்று சேர்ந்து, அப்பள்ளிக்கு தேவையான இருக்கைகள், குடம், கடிகாரம் உள்ளிட்ட உபகரணங்களை, மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச்சென்று, பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைத்தனர்.