/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலி டோக்கன் கொடுத்துபைக் திருட முயன்றவர் கைது
/
போலி டோக்கன் கொடுத்துபைக் திருட முயன்றவர் கைது
ADDED : மார் 06, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலி டோக்கன் கொடுத்துபைக் திருட முயன்றவர் கைது
சேலம்:சேலம், ஜாகீர் அம்மாபாளையம், மில்லத் நகரை சேர்ந்தவர் ராஜேஷ், 28. சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, மாநகராட்சி சைக்கிள் ஸ்டாண்டில் ஊழியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம், 'டி.வி.எஸ்., அப்பாச்சி' பைக்கை, ஸ்டாண்டில் நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், போலி டோக்கன் கொடுத்து, ராஜேஷ் பைக்கை திருடிச்செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அந்த வாலிபரை பிடித்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த பிரேம்குமார், 34, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.