/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயிற்சியாளர் மீது தாக்குதல்அ.தி.மு.க., நிர்வாகிக்கு வலை
/
பயிற்சியாளர் மீது தாக்குதல்அ.தி.மு.க., நிர்வாகிக்கு வலை
பயிற்சியாளர் மீது தாக்குதல்அ.தி.மு.க., நிர்வாகிக்கு வலை
பயிற்சியாளர் மீது தாக்குதல்அ.தி.மு.க., நிர்வாகிக்கு வலை
ADDED : மார் 06, 2025 01:53 AM
பயிற்சியாளர் மீது தாக்குதல்அ.தி.மு.க., நிர்வாகிக்கு வலை
ஆத்துார்:ஆத்துார், தெற்குகாட்டை சேர்ந்தவர் மணி, 34. எம்.பி.ஏ., படித்த இவர், விநாயகபுரம் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக உள்ளார். இவரது மனைவி காயத்ரி, ரயிலடி தெருவில் அழகு நிலையம் நடத்தும் ரூபாவிடம் உதவியாளராக உள்ளார். ரூபாவுக்கும், ஆத்துாரை சேர்ந்த, ஜெ., பேரவை மாவட்ட இணை செயலரான சங்கருக்கும் பழக்கம் இருந்துள்ளது.
கடந்த பிப்., 27ல், ரூபாவை, சங்கர் அடித்துள்ளார். இதனால் ரூபா, காயத்ரி, அவரது கணவர் மணியை, உதவிக்கு அழைத்துள்ளார். இதில் மணி, சங்கர் இடையே பிரச்னை எழுந்தது. நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்தில் மணி இருந்தார். அங்கு வந்த சங்கர், தே.மு.தி.க.,வின் மாவட்ட தொண்டர் படை முன்னாள் செயலர் பிரபு ஆகியோர் சேர்ந்து மணியை தாக்கினார். படுகாயமடைந்த மணி, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆத்துார் டவுன் போலீசார், சங்கர், பிரபு மீது, 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.