/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொத்த மளிகை பொருட்கள் விற்பனை செவ்வாய்ப்பேட்டையில் களைகட்டியது
/
மொத்த மளிகை பொருட்கள் விற்பனை செவ்வாய்ப்பேட்டையில் களைகட்டியது
மொத்த மளிகை பொருட்கள் விற்பனை செவ்வாய்ப்பேட்டையில் களைகட்டியது
மொத்த மளிகை பொருட்கள் விற்பனை செவ்வாய்ப்பேட்டையில் களைகட்டியது
ADDED : மார் 15, 2025 02:27 AM
மொத்த மளிகை பொருட்கள் விற்பனை செவ்வாய்ப்பேட்டையில் களைகட்டியது
சேலம்:சேலம், செவ்வாய்ப்பேட்டை, பால் மார்க்கெட், லீபஜார் பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட மொத்த மளிகை பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன. இவற்றில் மாவட்ட சுற்றுவட்டார வியாபாரிகள், மக்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து, பொருட்களை மொத்தமாக வாங்கிச்செல்கின்றனர்.
குறிப்பாக ஜனவரி, பிப்ரவரியில் அறுவடை சீசன் என்பதால் பருப்பு, தானிய வகைகள், பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை குறைவது வழக்கம். இதனால் மார்ச்சில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை, ஓராண்டுக்கு வாங்கி செல்வதை ஏராளமானோர் வழக்கமாக வைத்துள்ளனர்.
அதன்படி தற்போது செவ்வாய்ப்பேட்டை, லீபஜாரில், 'ஆண்டு செலவு' விற்பனை சூடு பிடித்துள்ளது. இதனால் சேலம் மட்டுமின்றி கடலுார், கள்ளக்குறிச்சி, விருதாசலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, நேற்று மளிகை பொருட்களை வாங்கி
சென்றனர். இது சில நாட்களாகவே தொடர்கிறது.