/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் அரசு மருத்துவமனையில்'பாதம் பாதுகாப்போம்' சிகிச்சை
/
சேலம் அரசு மருத்துவமனையில்'பாதம் பாதுகாப்போம்' சிகிச்சை
சேலம் அரசு மருத்துவமனையில்'பாதம் பாதுகாப்போம்' சிகிச்சை
சேலம் அரசு மருத்துவமனையில்'பாதம் பாதுகாப்போம்' சிகிச்சை
ADDED : மார் 15, 2025 02:28 AM
சேலம் அரசு மருத்துவமனையில்'பாதம் பாதுகாப்போம்' சிகிச்சை
சேலம்:சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சை பிரிவில், 'பாதம் காப்போம் சிகிச்சை திட்டம்' தொடங்கப்பட்டது.
இதுகுறித்து டீன் தேவிமீனாள் கூறியதாவது: தினமும் சராசரியாக, 20 நீரிழிவு நோயாளிகள், பாதம் பாதிப்பால் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில், 3 முதல், 5 பேர், பாதங்களில் புண் ஏற்பட்டு கால் அல்லது விரல்களை இழக்க நேரிடுகிறது. அதை தடுக்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீரிழிவு பாத மருத்துவ திட்டப்படி, 'மக்களை தேடி
மருத்துவ திட்டம்' மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீரிழிவு பாதநோய் ஆரம்ப நிலையில் கண்டறிதல், பாத பாதிப்பு குறித்த விழிப்புணர்வு, கால் புண் தடுப்பு, காலணி வழங்குதல், கால் புண் சிகிச்சை, நீரிழிவு பாத அறுவை சிகிச்சை, கால்களை இழக்க நேரிடும்போது செயற்கை கால் வழங்குதல், என, பாத மருத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்த சேவையை பெறலாம்.
பொது, ஒட்டுறுப்பு அறுவை துறைகள், எலும்பு முறிவுத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடால், கால் இழப்புகளை தடுக்க, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான அதிநவீன மருத்துவ வசதி, மருத்துவமனையில் உள்ளது. காலில் உணர்வு இழப்பின் காரணமாக ஏற்படும் புண்களை குணப்படுத்த நவீன அறுவை சிகிச்சை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.