/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழுக்கு குரல் கொடுக்கும் தலைவர்பா.ம.க., பேனரால் பலரும் கிண்டல்
/
தமிழுக்கு குரல் கொடுக்கும் தலைவர்பா.ம.க., பேனரால் பலரும் கிண்டல்
தமிழுக்கு குரல் கொடுக்கும் தலைவர்பா.ம.க., பேனரால் பலரும் கிண்டல்
தமிழுக்கு குரல் கொடுக்கும் தலைவர்பா.ம.க., பேனரால் பலரும் கிண்டல்
ADDED : மார் 19, 2025 01:26 AM
தமிழுக்கு குரல் கொடுக்கும் தலைவர்பா.ம.க., பேனரால் பலரும் கிண்டல்
சேலம்:சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன், பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், மண்டல அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 15வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு நடத்த வலியுறுத்தினர். முன்னதாக போராட்டம் குறித்து, பா.ம.க., தொழிற்சங்கம் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அதில், 'டாக்டருக்கு டாக்கடர்; வளர்க என்பதற்கு வாளர்க; ஒப்பந்த என்பதற்கு ஒப்பத்த; பேச்சுவார்த்தைக்கு போச்சுவார்த்ததை; கண்டன என்பதற்கு கண்டண; போக்குவரத்துக்கு பொக்குவரத்து, தொழிற்சங்கத்துக்கு தொழிற்ச்சங்கம் என, பல்வேறு பிழைகள் இருந்தன. இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டம் முடிந்த நிலையில் நேற்றும் கூட அந்த பேனர் அதே இடத்தில் இருந்ததால், பலரது நகைப்புக்குள்ளானது.
ஏற்கனவே மும்மொழி விவகார பிரச்னை உள்ள நிலையில், பா.ம.க., தலைவர் அன்புமணியோ, ஒரு மொழி கொள்கை என, தமிழுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் இங்கு அவரது கட்சியினர், பேனரை, ஏராளமான பிழைகளுடன் வைத்ததை பார்த்து, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் இந்த பேனர் வரைலாகி
வருகிறது.