/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதயாத்திரைசேலம் வந்த குழுவுக்கு 'நகரத்தார்' வரவேற்பு

ADDED : மார் 21, 2025 01:29 AM
தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதயாத்திரைசேலம் வந்த குழுவுக்கு 'நகரத்தார்' வரவேற்பு
சேலம்:தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பாத யாத்திரையாக செல்லும் குழுவினர் நேற்று சேலம், திருவாக்கவுண்டனுார் வந்தனர். அப்போது அவர்களுக்கு, சேலம் நகரத்தார் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அதன் தலைவர் சோமசுந்தரம், 65, கூறியதாவது:தேவகோட்டையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் நகரத்தார் உள்ளிட்ட பிற சமூகங்களை சேர்ந்த சிவ பக்தர்கள் என, 1983ல், 13 பேர் கொண்ட முதல் குழுவினர், ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பாத யாத்திரை சென்றனர். அதற்கு பின், இதே பகுதிகளை சேர்ந்தவர்கள், 7 ஆண்டுக்கு ஒருமுறை பாத யாத்திரை செல்கிறோம்.
அதன்படி தற்போது, 7வது குழு, என் தலைமையில் கடந்த, 3ல் பாதயாத்திரையை தொடங்கி இங்கு வந்துள்ளோம். இதில், 7 மாநிலங்களை கடந்து, 2,500 கி.மீ.,ரை, 118 நாட்களில், வரும் ஜூன், 27ல் காசியில் நிறைவு செய்ய உள்ளோம். இக்குழுவில், 24 பேர் உள்ளனர்.
அத்யாவசிய பொருட்களை வேனில் எடுத்துச்செல்கிறோம். உணவு, தங்குமிடத்துக்கு ஆங்காங்கே ஆன்மிக பக்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். தினமும் காலை, மாலையில், 30 முதல்,
35 கி.மீ., பாதயாத்திரை செல்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக குழுவினரை, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு தங்கி ஓய்வெடுத்த பின், இன்று ஓமலுார் செல்கின்றனர்.