/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாம்பல் பூசணி விலை கடும் சரிவுபயிரிட்ட விவசாயிகள் வேதனை
/
சாம்பல் பூசணி விலை கடும் சரிவுபயிரிட்ட விவசாயிகள் வேதனை
சாம்பல் பூசணி விலை கடும் சரிவுபயிரிட்ட விவசாயிகள் வேதனை
சாம்பல் பூசணி விலை கடும் சரிவுபயிரிட்ட விவசாயிகள் வேதனை
ADDED : மார் 21, 2025 01:43 AM
சாம்பல் பூசணி விலை கடும் சரிவுபயிரிட்ட விவசாயிகள் வேதனை
ப.வேலுார்:-வரலாறு காணாத வகையில், சாம்பல் பூசணி விலை சரிந்ததால் பயிரிட்ட விவசாயிகள் வேதனையடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகாவுக்குட்பட்ட பரமத்தி, மாவுரூட்டி, அர்த்தநாரிபாளையம், கந்தம்பாளையம், வேலகவுண்டம்பட்டி பகுதிகளில், சாம்பார் பூசணி எனப்படும் சாம்பல் பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு விளையும் பூசணிகளை கேரளா, தமிழக வியாபாரிகள் நேரடியாக வயல்களுக்கே வந்து, கொள்முதல் செய்கின்றனர். சென்னை சந்தைக்கும் சாம்பல் பூசணி அதிகளவில் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. இரு மாதத்திற்கு முன், கிலோ சாம்பல் பூசணி, 20 முதல், 30 ரூபாய் வரை விற்றதால், அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்தனர். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விசேஷ நாட்கள் இல்லாததால், விற்பனையும் குறைந்து விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. சாம்பல் பூசணி கிலோ, 2 முதல், 3 ரூபாய் வரை மட்டுமே விற்பதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: சாம்பல் பூசணி நடப்பாண்டு நன்றாக செழித்து வளர்ந்து விளைச்சல் பெருகியுள்ளது. ஆனால், மொத்த வியாபாரிகள் சொற்ப விலைக்கு வாங்கி செல்வது ஏமாற்றம் அளிப்பது மட்டுமின்றி, எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. இவ்வாறு கூறினர்.