/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தட்டுவடை செட் தயாரிப்பு: சேலம் மகளிர் குழுவுக்கு பரிசு
/
தட்டுவடை செட் தயாரிப்பு: சேலம் மகளிர் குழுவுக்கு பரிசு
தட்டுவடை செட் தயாரிப்பு: சேலம் மகளிர் குழுவுக்கு பரிசு
தட்டுவடை செட் தயாரிப்பு: சேலம் மகளிர் குழுவுக்கு பரிசு
ADDED : மார் 27, 2025 01:06 AM
தட்டுவடை செட் தயாரிப்பு: சேலம் மகளிர் குழுவுக்கு பரிசு
சேலம்:சேலம் மாவட்டத்தில் மகளிர் குழு உற்பத்தி செய்யும் பொருட்களை, நேரடியாக மொத்த விற்பனை செய்வதற்கு, வாங்குவோர் - விற்பனையாளர் சந்திப்பு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:
நுகர்வோர் விரும்பும்படி பாய், புடவைகள் உள்ளிட்ட பொருட்கள் மகளிர் குழுவால் தயாரிக்கப்படுகின்றன.
அதனால் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு கூட்டத்தில், 90க்கும் மேற்பட்ட குழுக்களின், 104 பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு, விற்பனை செய்ய, 40க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் நேரடியாக கொள்முதல் செய்வோரிடம் விற்பனை செய்ய, இத்தகைய சந்திப்பு கூட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும். அத்துடன் மகளிர் குழு உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடரும்.
சென்னையில் மாநில அளவில் நடந்த மகளிர் குழு விற்பனை பொருட்கள் கண்காட்சியில், சேலம் மாவட்டத்தின் அடையாளமாக திகழும் தட்டுவடை தயாரிப்பில் சிறந்து விளங்கிய கொளத்துார் துளசி மகளிர் குழுவுக்கு, 2ம் இடத்துக்கான பாராட்டு சான்றிதழ், முதல்வரால் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.கூடுதல் கலெக்டர் பொன்மணி, வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் உள்பட பலர் பங்கேற்றனர்.