/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊட்டச்சத்து மையம் நடத்தியவர் கொலைஎஸ்.பி., விசாரணை; இளைஞரிடம் 'கிடுக்கி'

ADDED : ஏப் 02, 2025 01:51 AM
ஊட்டச்சத்து மையம் நடத்தியவர் கொலைஎஸ்.பி., விசாரணை; இளைஞரிடம் 'கிடுக்கி'
சங்ககிரி:ஊட்டச்சத்து மையம் நடத்தியவர் கொலை செய்யப்பட்ட நிலையில், 2ம் நாளாக, சேலம் எஸ்.பி., விசாரித்தார். தனிப்படை போலீசார், ஒரு இளைஞரிடம் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பக்காலியூர், அருவங்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65. சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், தனியே வீடு வாடகைக்கு எடுத்து, உடல் எடையை குறைத்தல் உள்ளிட்ட, ஊட்டச்சத்து மையம் நடத்தி வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்த அவர், நேற்று முன்தினம், அவரது மையத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அங்கு சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் விசாரித்தார்.
இறந்தவரின் மனைவி ராணி புகார் அளித்து, 'ராஜேந்திரனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் பிரிந்து சென்றேன். சொத்து சம்பந்தமாக, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 2ம் நாளாக நேற்று, சங்ககிரி வந்த எஸ்.பி., கவுதம் கோயல், சம்பவ இடத்தில் விசாரணையை தொடர்ந்தார். பெண்கள் விஷயமா, சொத்து சம்பந்தமா என, கொலை குறித்து விசாரித்தார். மேலும் ஏ.டி.எஸ்.பி., பாலகுமாரன், சங்ககிரியில் முகாமிட்டு விசாரிக்கிறார். தவிர, 3 தனிப்படையினர் விசாரிக்கின்றனர். அவர்கள், அருகே உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து, சங்ககிரி ஆர்.எஸ்., பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.