/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓமலுார் நகருக்கு புறவழிச்சாலை அவசியம்சட்டசபையில் எம்.எல்.ஏ., மணி பேச்
/
ஓமலுார் நகருக்கு புறவழிச்சாலை அவசியம்சட்டசபையில் எம்.எல்.ஏ., மணி பேச்
ஓமலுார் நகருக்கு புறவழிச்சாலை அவசியம்சட்டசபையில் எம்.எல்.ஏ., மணி பேச்
ஓமலுார் நகருக்கு புறவழிச்சாலை அவசியம்சட்டசபையில் எம்.எல்.ஏ., மணி பேச்
ADDED : ஏப் 05, 2025 01:31 AM
ஓமலுார் நகருக்கு புறவழிச்சாலை அவசியம்சட்டசபையில் எம்.எல்.ஏ., மணி பேச்சு
ஓமலுார்:தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சேலம் மாவட்டம் ஓமலுார் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மணி பேசியதாவது:
இ.பி.எஸ்., நெடுஞ்சாலை துறை அமைச்சராக பொறுப்பேற்று வகித்த, 10 ஆண்டு காலகட்டத்தில், தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களின் தேவைக்கேற்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் விலை மதிப்பில்லா மனித உயிர்கள் இழப்பதை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். அத்துறையில் உள்ள திட்ட வடிவமைப்பு, ஆய்வு பிரிவினை பலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
மேட்டூர் - பவானி சாலை இருபுறமும் அகலப்படுத்தும் பணி மட்டும் செய்யப்பட்டுள்ளது. இச்சாலையை, 4 வழிச்சாலையாக அமைக்க வேண்டும். இடைப்பாடி தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க, அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, நிலம் அளவீடு செய்து, நிலம் எடுக்கும் பணி, 80 சதவீதம் முடிந்த நிலையில், தற்போது அரசு இப்பணியை கிடப்பில் போட்டுள்ளது. புறவழிச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும்.
ஓமலுார் டவுன் பஞ்சாயத்து வளர்ந்து வரும் நகரப்பகுதி. தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்லும் நகராகும். சங்ககிரிக்கு செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், ஓமலுார் ஊருக்குள் புகுந்து கடக்க வேண்டிய சூழல் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன், சாலை விபத்துகள் ஏற்பட்டு, மாணவியர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழப்பும் ஏற்படுகிறது. அதனால் ஓமலுார் நகரத்துக்கு புற
வழிச்சாலை அவசியம் தேவை.ஓமலுார் - மேச்சேரி சாலையில் ரயில்வே கிராஸிங் இடத்தில், சுரங்கப்பாதை அமைக்க அனுமதி வழங்கியதாக அறிகிறேன். அதற்கு பதில் மேம்பாலம் அமைக்க வேண்டும். காமலாபுரம் மேம்பால பணி மிக மந்தமாக நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அப்பகுதியை கடக்க மிகவும் தாமதமாகிறது. மேம்பால பணியை துரிதமாக முடிக்க ஆவண செய்ய வேண்டும். காடையாம்பட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிட வேண்டும். ஓமலுார் தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைத்துத்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

