/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாத.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாத.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்
வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாத.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்
வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாத.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 05, 2025 01:35 AM
வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாத.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ஆத்துார்:த.வெ.க., சார்பில், ஆத்துார் ரயில்வே ஸ்டேஷன் முன் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலர் வெங்கடேசன் தலைமை வகித்து பேசுகையில், 'சிறுபான்மையினரான இஸ்லாம் சமுதாயத்தினருக்கு வக்ப் வாரியம் உள்ளது. அவர்கள் உரிமையை பறிக்கும்படி, மத்திய அரசு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை, மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்,'' என்றார்.
நிர்வாகி 'உளறல்'தொடர்ந்து நகர நிர்வாகி முஸ்தபா பேசுகையில், ''சட்ட திருத்த மசோதா வெற்றி பெறும் என விஜய் சொல்லியிருக்கிறார். கண்டிப்பாக இந்த மசோதாவுக்கு எல்லோரும் ஆதரவு தரவேண்டும்' என பேச, கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து, கோஷம் எழுப்பினர். ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர்.