/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்குவீடுகளில் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதி

ADDED : ஏப் 17, 2025 01:40 AM
மேட்டூர்:மேட்டூர் சுற்றுப்பகுதியில் நேற்று அதிகாலை காற்றுடன் மழை பெய்தது. நேற்று முன்தினம், 26.2 மி.மீ., மழை பெய்த நிலையில் நேற்றும் மழை பெய்ததால், வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்து, 7வது வார்டு சக்தி நகர் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்றது.
ஓடை நிரம்பி, அருகே வசிக்கும் கூலித்தொழிலாளர்கள், 10 பேரின் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. அரிசி, சமையல் பொருட்கள், 'டிவி', உள்ளிட்ட பொருட்கள் மூழ்கின. மழை நின்றதும் சுப்ரமணியன், துரைசாமி, லதா, அன்பு, சிலம்பரசன் ஆகியோர், வீடுகளில் தேங்கி நின்றி மழைநீரை வெளியேற்றினர்.
தொடர்ந்து டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், வருவாய்த்துறையினர், மழைநீர் புகுந்த வீடுகளை பார்வையிட்டனர். தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் மூலம் ஓடையில் தேங்கியிருந்த மணல், செடி, கொடிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, வீடுகளில் புகுந்த மழைநீரை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.