/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'இன்ஸ்பயர்' விருது கண்டுபிடிப்புபள்ளி அளவில் 1,197 குழு தேர்வு
/
'இன்ஸ்பயர்' விருது கண்டுபிடிப்புபள்ளி அளவில் 1,197 குழு தேர்வு
'இன்ஸ்பயர்' விருது கண்டுபிடிப்புபள்ளி அளவில் 1,197 குழு தேர்வு
'இன்ஸ்பயர்' விருது கண்டுபிடிப்புபள்ளி அளவில் 1,197 குழு தேர்வு
ADDED : மார் 10, 2025 01:31 AM
'இன்ஸ்பயர்' விருது கண்டுபிடிப்புபள்ளி அளவில் 1,197 குழு தேர்வு
பள்ளி மாணவ, மாணவியர் இடையே அறிவியல் ஆர்வம், புதுசிந்தனைகளை ஊக்குவிக்க, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில், 'இன்ஸ்பயர்' விருது, கண்காட்சி ஆண்டு
தோறும் நடத்தப்படுகிறது.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தி, சிறந்த, 'ஐடியா'க்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது, உதவித்தொகைக்கு, ஏராளமானோர், இன்ஸ்பயர் விருது இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர். அவற்றில் மாவட்ட போட்டிகளில் பங்கேற்க, 1,197 குழுவினர் தேர்வு செய்யப்பட்டு, சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கு தலா, 10,000 ரூபாய் வீதம் உதவித்தொகை, நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.
தொடர்ந்து அவர்களின் புதுமை கண்டுபிடிப்பு, ஐடியாக்களை மேலும் செயல்படுத்தி, மாவட்ட கண்காட்சியில் படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டும். அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, மாநில, தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு, விருது,
பரிசுத்தொகை வழங்கப்படும்.நமது நிருபர்