/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாராயம் விற்ற வீடியோ 'வைரல்'சேலம் மாவட்டத்தில் 20 பேர் கைது; 14 பார்களுக்கு 'சீல்'
/
சாராயம் விற்ற வீடியோ 'வைரல்'சேலம் மாவட்டத்தில் 20 பேர் கைது; 14 பார்களுக்கு 'சீல்'
சாராயம் விற்ற வீடியோ 'வைரல்'சேலம் மாவட்டத்தில் 20 பேர் கைது; 14 பார்களுக்கு 'சீல்'
சாராயம் விற்ற வீடியோ 'வைரல்'சேலம் மாவட்டத்தில் 20 பேர் கைது; 14 பார்களுக்கு 'சீல்'
ADDED : பிப் 06, 2025 01:34 AM
ஆத்துார் :போலீசுக்கு, 'மாமூல்' கொடுத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வீடியோ வெளியானதால், சேலம் மாவட்டத்தில், 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 பார்களுக்கு, 'சீல்' வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, எஸ்.பி., தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே வளையமாதேவி பிரிவு சாலையில், 'டாஸ்மாக்' கடை உள்ளது. அதன் எதிரே, தி.மு.க., ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ஜோதிவேல், மதுபாட்டில், சாராய பாக்கெட் விற்பதாகவும், போலீசாருக்கு 'மாமூல்' கொடுத்து, இத்தொழில் நடந்து வருவதாகவும், நேற்று முன்தினம் வீடியோ வெளியானது. இது தொடர்பாக மாவட்டத்தில் மொத்தம், 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் கூறியதாவது:ஆத்துாரில் அனுமதி பெறாத பார் நடத்திய, 10 பேர் உள்பட, மாவட்டம் முழுதும், 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 இடங்களில், 'டாஸ்மாக்' கடை எதிரே, அனுமதியின்றி பார் செயல்படுவது கண்டறியப்பட்டு, 'சீல்' வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு நாட்களுக்கு முன், ஆத்துாரை சேர்ந்த ரவி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சென்று சாராயம் வாங்கி வந்தது தெரிந்தது. இதையறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார், ரவியிடம் விசாரித்தனர். கச்சிராயபாளையம், கல்வராயன்மலையில் சாராயம் விற்போர் குறித்து விசாரித்து, தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்
படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.