/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாளமுத்து நடராஜன் கொலை வழக்குவீடியோ கான்பரன்சில் 3 கைதி ஆஜர்
/
தாளமுத்து நடராஜன் கொலை வழக்குவீடியோ கான்பரன்சில் 3 கைதி ஆஜர்
தாளமுத்து நடராஜன் கொலை வழக்குவீடியோ கான்பரன்சில் 3 கைதி ஆஜர்
தாளமுத்து நடராஜன் கொலை வழக்குவீடியோ கான்பரன்சில் 3 கைதி ஆஜர்
ADDED : பிப் 13, 2025 01:15 AM
தாளமுத்து நடராஜன் கொலை வழக்குவீடியோ கான்பரன்சில் 3 கைதி ஆஜர்
சேலம்:சேலம் மாநகர் மாவட்ட காங்., தலைவராக இருந்த தாளமுத்து நடராஜனை, 2002ல், 'பவாரியா' எனும் வடமாநில கும்பல் கொலை செய்து, 200 பவுன் நகைகளை கொள்ளையடித்தது. அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, கும்பல் தலைவன் ஓம் பிரகாஷ் உள்பட, 8 பேர் மீது வழக்குப்பதிந்தனர். கைதான ஜெயில்தார் சிங் ஜாமினில் வெளியில் உள்ளார்.
அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெகதீஷ் ஆகியோர், சென்னை, புழல் சிறையில் உள்ளனர். இவர்களை வைத்து நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளது. நேற்று நடந்த விசாரணையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், புழல் சிறையில் இருந்து மூவரும், சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணையை வரும், 25க்கு, நீதிபதி கலைவாணி
ஒத்திவைத்தார்.