/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டாசு வெடித்து சிதறி துக்க வீட்டில் 6 பேர் காயம்
/
பட்டாசு வெடித்து சிதறி துக்க வீட்டில் 6 பேர் காயம்
பட்டாசு வெடித்து சிதறி துக்க வீட்டில் 6 பேர் காயம்
பட்டாசு வெடித்து சிதறி துக்க வீட்டில் 6 பேர் காயம்
ADDED : செப் 07, 2024 08:18 AM
ஜலகண்டாபுரம்: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி, சோரை-யான்வளவை சேர்ந்தவர் சந்திரன், 90. இவர் வயது மூப்பால் இறந்ததால் நேற்று மதியம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் உள்-ளிட்டோர் வந்தனர். அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அதில் இருந்து தீப்பொறி, துக்க வீட்டில் மொத்தமாக வைக்கப்-பட்ட பட்டாசு மூட்டையில் விழுந்தது.
தொடர்ந்து மொத்த பட்-டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அருகே இருந்த, சோரை-யான்வளவு செல்வமணி, 50, செல்வராஜ், 44, தனபால், கண்ணன், 28, ரவி, 28, பூலாம்பட்டி செல்லம்மாள், 75, ஆகியோர் மீது பட்டாசு பட்டதில் காயம் அடைந்தனர். தொடர்ந்து ஜலகண்டாபும், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ-மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.