/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்லுாரிகளில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க பா.ம.க., கோரிக்கை
/
கல்லுாரிகளில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க பா.ம.க., கோரிக்கை
கல்லுாரிகளில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க பா.ம.க., கோரிக்கை
கல்லுாரிகளில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க பா.ம.க., கோரிக்கை
ADDED : ஜூலை 06, 2024 06:53 AM
சேலம் : பா.ம.க.,வின் மாநில மாணவர் சங்க செயலர் விஜயராசா தலை-மையில் நிர்வாகிகள், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து விஜயராசா கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலைக்கல்லுாரிகளில் தற்போது நடக்கும் மாணவ, மாணவியர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறை-யாக பின்பற்றப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்ப-டுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் நிலவும் காலி இடங்களில் பழங்குடி, பட்டியலின மாணவ, மாணவியரை சேர்த்து அந்த இடங்களை நிரப்புகின்றனர்.
அதேநேரம் பழங்குடி, பட்டியலின இட ஒதுக்கீட்டில் ஏற்படும் காலி இடங்களில் பிற சமூகத்தினருக்கு வாய்ப்பு அளிக்காமல் காலி இடமாகவே வைத்துள்ளது சமூகநீதிக்கு எதிரானது. தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி அரசு கல்லுாரிகளில் பிற்படுத்-தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பாது-காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.