ADDED : டிச 14, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார் மோதி தொழிலாளி பலி
வாழப்பாடி, டிச. 14-
சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் இஸ்மாயில், 31. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 11 இரவு, 11:00 மணிக்கு, வாழப்பாடி, மேட்டுப்பட்டி அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து வாழப்பாடி நோக்கி சென்ற, 'பிரீஸா' கார் மோதி, துாக்கி வீசப்பட்டார். மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியில் உயிரிழந்தார். இஸ்மாயில் மனைவி செமினா புகார்படி, வாழப்பாடி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.