/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க வலியுறுத்தல்
/
கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 18, 2025 01:51 AM
கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க வலியுறுத்தல்
மேட்டூர், :மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் திறக்கப்படும் நீரின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு ஜூலை, 30ல் பாசனத்துக்கு நீர் திறந்த நிலையில், கடந்த, 15 மாலை, 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. கால்வாயில் சென்ற நீர் வடிந்து, நேற்றுடன் இரு நாட்களாகிறது.
இந்நிலையில் குள்ளவீரன்பட்டி, நேரு நகர், காவேரி நகர், காவேரி கிராஸ், நவப்பட்டி பகுதிகளில், கரையோரம் வசிக்கும் மக்கள், ஆடை உள்ளிட்ட கழிவை, கால்வாயில் கொட்டியுள்ளனர். டன் கணக்கில் குப்பை குவிந்து தேங்கி நிற்கிறது. குப்பையை அகற்றவும், கரையோர மக்கள் கழிவை, கால்வாயில் கொட்டுவதை தடுக்கவும், நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தினர்.