/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேய் விரட்டும் திருவிழாமுறத்தடி வாங்கிய பெண்கள்
/
பேய் விரட்டும் திருவிழாமுறத்தடி வாங்கிய பெண்கள்
ADDED : ஜன 18, 2025 01:53 AM
பேய் விரட்டும் திருவிழாமுறத்தடி வாங்கிய பெண்கள்
வாழப்பாடி, : காணும் பொங்கலையொட்டி, வாழப்பாடி, பொன்னாரம்பட்டு பெரியாயி கோவில் அருகே ஆற்றங்கரையோரம், பேய் விரட்டும் வினோத திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதில் ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று, பூசாரியிடம் முறத்தால் அடி வாங்கினர்.
இதுகுறித்து பெண்கள் கூறியதாவது:முன்னோர் வழியில் மரபு மாறாமல், இங்கு பேய் விரட்டும் விழா நடக்கிறது. இதற்கு விரதமிருந்து வழிபடும் பூசாரிகள், முறத்தால் அடிப்பதால், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, புத்துணர்வு, தன்னம்பிக்கை கிடைக்கின்றன. தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்குவதோடு, நல்ல வரன், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்கள் கூட, காணும் பொங்கலில் சொந்த கிராமத்துக்கு வந்து, பூசாரிகளிடம் பேய் விரட்டிக்கொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.