/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணை தொடக்கம்
/
துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணை தொடக்கம்
ADDED : ஜன 19, 2025 01:37 AM
சேலம், :சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன். இவர், பல்கலை நிர்வாகிகளை இயக்குனராக கொண்ட, 'பூட்டர் பவுண்டேஷன்' எனும் கல்வி நிறுவனத்தை தொடங்க, சிண்டிகேட் கூட்டத்தில், ஒப்புதலுக்கு வைத்திருந்தார்.
ஆனால் பல்கலை விதிக்கு எதிராக இருப்பதாகவும், ஊழல் நடந்திருப்பதாகவும், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில், கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
சமீபத்தில், இந்த வழக்கை விசாரிக்கலாம் என, போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் புகார் அளித்த பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல், நிர்வாகி கிருஷ்ணவேணி, சட்ட ஆலோசகர் இளங்கோவன் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, சக்திவேல், கிருஷ்ணவேணி ஆஜராகினர். அவர்களிடம், உதவி கமிஷனர் ரமலீ ராமலட்சுமி விசாரணை மேற்கொண்டார்.

