/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூட்டுறவு விற்பனை சங்கத்தில்பருத்தி வரத்து அதிகரிப்பு
/
கூட்டுறவு விற்பனை சங்கத்தில்பருத்தி வரத்து அதிகரிப்பு
கூட்டுறவு விற்பனை சங்கத்தில்பருத்தி வரத்து அதிகரிப்பு
கூட்டுறவு விற்பனை சங்கத்தில்பருத்தி வரத்து அதிகரிப்பு
ADDED : ஜன 23, 2025 01:23 AM
கூட்டுறவு விற்பனை சங்கத்தில்பருத்தி வரத்து அதிகரிப்பு
வாழப்பாடி : சேலம் மாவட்டம் வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 620 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். குவிண்டால் ஆர்.சி.எச்., ரகம், 6,699 முதல், 7,849 ரூபாய்; டி.சி.எச்., ரகம், 9,619 முதல், 11,541 ரூபாய்; கொட்டு, 3,198 முதல், 4,699 ரூபாய் வரை விலைபோனது.
இதன்மூலம், 16.50 லட்சம் ரூபாய்க்கு, பருத்தி விற்பனை நடந்தது. கடந்த வார ஏலத்தில், 560 மூட்டைகள் கொண்டுவரப்பட்டு, 15.74 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்த நிலையில், இந்த வாரம், 60 மூட்டைகள் வரத்து அதிகரித்ததாக, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.