ADDED : ஜன 24, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹெல்மெட் அணிந்து பைக்கில் ஊர்வலம்
சங்ககிரி, : சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, சங்ககிரியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தொடங்கிய ஊர்வலம், சேலம் பிரதான சாலை, வி.என்.பாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியே, பயணியர் விடுதியில் முடிந்தது. அங்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா, விபத்தின்றி வாகனங்களை இயக்க வேண்டும் என, மக்களிடம் அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சுதா, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் சேலம், கொண்டலாம்பட்டியில் சாலை பாதுகாப்பு குறித்து கல்லுாரி மாணவியர் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.