/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரபுரநாதர் கோவிலுக்கு அறங்காவலர் குழு அமைப்பு
/
கரபுரநாதர் கோவிலுக்கு அறங்காவலர் குழு அமைப்பு
ADDED : ஜன 29, 2025 01:13 AM
வீரபாண்டி, : சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் கும்பாபிேஷக திருப்பணிக்கு, 2022 ஆக., 22ல் பாலாலயம் செய்யப்பட்டது. அன்று முதல், மூலவர் திருமேனிகளை தவிர மற்ற அனைத்து பரிவார தெய்வங்கள், கோபுரங்களை மூடி வைத்துள்ளனர். இதற்கு அறங்காவலர் குழு அமைக்கப்படாததும் காரணம் என தெரியவந்தது.
அதேநேரம் கோவில் சார்பில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பின்படி, பூலாவரியை சேர்ந்த, தி.மு.க.,வின், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாவின் மனைவி சாந்தி, சாமிவேல், துரைசாமி, சின்னு, அன்பு அடங்கிய பட்டியல், 2023 டிசம்பரில், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்தது. இதுகுறித்து கடந்த, 20ல், நம் நாளிதழின், 'சாயாக்கடை திண்டு' பகுதியில் செய்தி
வெளியானது.இதைத்தொடர்ந்து, கோவில் சார்பில் பட்டியலில் உள்ள, 5 பேரை அறங்காவலர்களாக நியமித்து, கமிஷனர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் புது அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் வரும், 31ல், கரபுரநாதர் கோவிலில் சேலம் உதவி கமிஷனர் தலைமையில் நடத்தி, அன்றே பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என, அறநிலையத்துறையினர்
தெரிவித்தனர்.