/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி சக்கரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி சாவு
/
லாரி சக்கரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி சாவு
ADDED : ஜன 29, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாரி சக்கரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி சாவு
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே ராமிரெட்டிபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி, 58. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வாரச்சந்தை அருகே சாலை இடதுபுறம் தள்ளாடி நடந்து சென்றார்.
ஜலகண்டாபுரம் பக்கமிருந்து லாரி வந்தபோது, ராமசாமி தடுமாறி விழுந்தார். அப்போது லாரி பின்புற சக்கரம் ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்தில் இறந்தார். அவரது மகன் தங்கராஜ் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.