ADDED : பிப் 01, 2025 01:12 AM
அறங்காவலர் குழு தலைவர் தேர்வு
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் கும்பாபி ேஷக திருப்பணி, 3 ஆண்டாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதற்கு அறங்காவலர் குழு நியமிக்கப்படாததும் காரணமாக இருந்தது. அதற்கு விண்ணப்பித்தோரில் தேர்வு செய்யப்பட்ட, 5 பேர் பட்டியலை, அறநிலையத்துறை கமிஷனர் ஒப்புதலுக்கு அனுப்பி, ஒரு வழியாக ஓராண்டுக்கு பின் அனுமதி கிடைத்தது. இதனால் நேற்று, சேலம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜா தலைமையில், பட்டியலில் உள்ளவர்களுக்கு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வீரபாண்டி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாவின் மனைவி சாந்தி, அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின் தலைவராக சாந்தி, உறுப்பினர்கள் சாமிவேல், துரைசாமி, சின்னு, அன்பு ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் செயல் அலுவலர் சோழமாதேவி, குருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளை விநாயகர் கோவிலுக்கு, தி.மு.க.,வின், முன்னாள் கவுன்சிலர் ஸ்டாலின், குகன், சித்ரா, சிவக்குமார், மதுரைமேகம் ஆகியோரை, அறங்காவலர்களாக நியமித்து, நேற்று முன்தினம் தமிழக அரசின் முதன்மை செயலர் சந்தரமோகன், அரசாணை வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு மாதத்தில் தலைவரை தேர்வு செய்து கொள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.