/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரோந்து பணியில் தீவிரம் எஸ்.பி., அறிவுரை
/
ரோந்து பணியில் தீவிரம் எஸ்.பி., அறிவுரை
ADDED : பிப் 01, 2025 01:14 AM
ரோந்து பணியில் தீவிரம் எஸ்.பி., அறிவுரை
சேலம் :சேலம், நெத்திமேட்டில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தில், குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், எஸ்.பி., கவுதம் கோயல் தலைமை வகித்து பேசுகையில், ''மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காதபடி, ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வழக்கு விசாரணையை குறிப்பிட்ட காலத்தில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மேலும் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை, டி.எஸ்.பி.,க்களிடம் வழங்கி, மாவட்டத்தில் விழிப்புணர்வு மேற்கொள்ள, எஸ்.பி., அறிவுறுத்தினார்.